மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் சமூர்த்தி திணைக்களத்தின் சமூதாய அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம் பெற்றது-2024.06.25

 












(கல்லடி செய்தியாளர் & செய்தியாசிரியர் )




மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி முகாமையாளர் கே.பகீரதன்அவர்களின்  ஒழுங்கமைப்பில் மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் சு.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட  பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமூர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்    கலந்து கொண்டனர். 

பிரதேச மட்ட தலைவர்களின் அறிமுக நிகழ்வும் இடம் பெற்றதோடு
இவ் ஆண்டுக்கான முன்னேற்ற ஆய்வு ,மற்றும் மீளாய்வு ,கலந்துரையாடல்களும்  நடை பெற்றன .
இதன்போது  பிரதேச சமூதாய அமைப்பின் தலைவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் பி .சுதர்சினி நன்றியுரை வழங்கினார்