ஆப்கானிஸ்தானிடம் இலங்கை தோல்வியடைந்தது .

 


உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று விளையாட்டு (30) நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக பெத்தும் நிஸ்ஸங்க 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில், 242 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பந்துவீச்சில், இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 48 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.