SWO நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய சைவ மன்றமானது வருடாந்தம் மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை!





(கல்லடி செய்தியாளர்)

  SWO நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய சைவ மன்றமானது வருடாந்தம்  மனிதாபிமான பணிகளை    முன்னெடுக்க நடவடிக்கை
 எடுத்துள்ளது.

அந்த வகையில்  இவ் வருடம் வழங்கிய நிதியினைக் கொண்டு ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள 10 பயனாளிகளுக்கு  குடிநீர் பெற்றுக் கொள்வதற்கான குழாய்க் கிணறுகளை  நிர்மாணித்து புதன்கிழமை  (06) சம்பிரதாயபூர்வமாக மக்களிடம் கையளித்தது.

இந் நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று  பிரதேச செயலாளர் திருமதி. சத்தியானந்தி நமசிவாயம் கலந்து கொண்டு குழாய்க் கிணற்றினை திறந்து வைத்ததுடன், உரிய பயனாளியிடம் ஒப்படைத்தார்.

அத்தோடு இந் நிகழ்வில் S W O அமைப்பின் தலைவர் திருமதி.தயனி கிருஸ்ணாகரன்,  அரச அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், அமைப்பின் பணியாளர்கள், VCOT பணியாளர் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.