பாகிஸ்தானில் நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் ஒரே திகதியில் பிறந்த நாளை கொண்டாடியதை கின்னஸ் பதிவு செய்துள்ளது






பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும்  அமீர் அலி - குதேஜா என்ற தம்பதியினருக்கு  7 குழந்தைகள் இருக்கின்றனர்.

தாய் தந்தை போன்றே  குழந்தைகள் 7 பேரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் திகதி பிறந்தது சிறப்பம்சமாகும்

இந்த தம்பதிகளுக்கு  1991-ல் ஆகஸ்ட் மாதம் 1-ம் திகதி அன்றுதான் திருமணமும் நடந்துள்ளது
அதைப்போன்று பெற்றோருக்கும்  அதே தினத்தில் பிறந்த நாள் வருவது கூடுதலான சிறப்பம்சமாக கருதப்படுகிறது

குடும்ப தலைவரான  அமீர் அலி பேசுகையில்  “இது அனைத்துமே  இயற்கையின் கொடை ஆண்டவன் வழங்கிய  பரிசு. என்று கூறியுள்ளார்.