மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிப்புற்ற சுற்றுலாத்துறையை மீண்டும்
கட்டியெழுப்புவதற்கான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் ‘வெல்க்கம் பெக்
பெட்டர்’
என்னும் கருப்பொருளிள் கிறீன் கார்டன் சுற்றுலா விடுதியில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்டச்செயலகம் ,மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலாத்துறை சங்கம் மற்றும் (எஸ்4அய்ஜி) ஒருங்கிணைந்து நடாத்தியுள்ளது.
கடந்த வருடங்களினை நோக்கும்போது பல பொருளாதார நெருக்கடிகளும் நாட்டின்
அசாதாரண சூழ்நிலைகளின் விளைவாக சுற்றுலாப்பயனிகளின் வருகையில் வீழ்ச்சி
காணப்பட்டதுடன்
2019 ஆண்டு காலப்பகுதி தொடங்கி இன்றுவரை பல்வேறு வகையான அனர்த்தங்கள்,
மற்றும் அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எரிபொருள்
தட்டுப்பாடு போன்ற சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டதுன் இதன் விளைவாக
சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்துள்ளது இதனைக் கட்டியெழுப்பும் முகமாக அதில்
ஒரு கட்டமாக ‘வெல்க்கம் பெக் பெட்டர்’ என்னும் நிகழ்வு இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது.
அண்மைக்கால தகவலின்படி மீண்டும் பாரிய எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தருகின்ற நிலையில் இதற்கு தயாராகும் வகையில் பல நடவடிக்கைகளினை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அந்த வகையில்
(எஸ்4அய்ஜி) மற்றும் (அவுஸ்ட்டேலியன் எயிட்) திறன்அபிவிருத்தி இராஐhங்க அமைச்சின் ஒப்பந்தத்தின் ஒரு நிகழ்ச்சித் திட்டமாக.
( எஸ்4அய்ஜி )யிடமுள்ள வளங்களை தேவையின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான விபரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் தேவையுடையோரின் விபரங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறைசார் வியாபாரத்தில் ஈடுபடுவோர் பங்குபெற்று பயனடைந்துள்ளதுடன் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களும் பங்குபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















