அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல மாவட்ட செயலகங்களிலும் அனர்த்த முன் ஆயத்த செயற்பாடுகள் முன்னெடுப்பு













 வரதன்,

 

அனர்த்த முகாமைத்து அமைச்சினால்  EL NINO தாக்கத்தினால் பாதிக்கப் பட்டுள்ள  மாவட்டங்களை இனம் கண்டு தற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்க  நிலைமை இதனால்  ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தை அடுத்து விசேட  அனர்த்த முன் ஆயத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 இதே வேலை  மட்டக்களப்பு மாவட்ட  வட கீழ்  பருவமழை திடீர் அனர்த்த முன்ஆயத்த கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி  சுதர்ஷினி ஸ்ரீகாந்த்  தலைமையில்  பழைய மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்றது

 இதன் போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு கரையோர பிரதேசங்களில் உள்ள பொது மக்களின் பாதுகாப்பு திடீர் மழை வீழ்ச்சி காற்று வெள்ளம் மாவட்டத்தில் உள்ள முக்கிய குளங்களின் நீர்மட்டத்தின் அளவு சுகாதாரத்தாரப்பினரின் மற்றும் முப்படையினரின் முன்னாயத்த செயற்பாடுகள் இன பலதரப்பட்ட விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன 

 மாவட்டத்தின்  முப்படையின்  உயர் அதிகாரிகள் வானிலை அவதான நிலையத்தின் மற்றும் நீர்ப்பாசத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் சகல பிரதேச செயலகங்களின் பிரதேச  செயலாளர்   மாவட்ட செயலக  அனர்த்த முகாமைத்துவ உத்தியோகஸ்த்தர் பிரதேச சபைகளின் சுகாதாரத் தரப்பினர் உத்தியோகஸ்த்தர்கள் என பலர் இந்த விசேட அனர்த்த முகாமைத்துவ கலந்துரையாடலின் போது  கலந்து கொண்டிருந்தனர்.