"ஈழத்தில் எழுந்த முன்னோடி பக்தி இலக்கியம்" பேராசிரியர் செ.யோகராசா குறிப்பிலிருந்து.

 

 


 

  கல்முனை தமிழ்ச்சங்கத் தலைவர் பரதன் கந்தசாமி

காலப்பின்னணியுடனும் சமகால இலக்கியச் செல்நெறியுடனும் ஒப்பிட்டு நினைவு) கூர்ந்து அவ்வடிப்படையில் இப்பக்தி இலக்கிய தொகுதி பற்றிய மனப்பதிவுகளை எடுத்துரைப்பது பயனுடையது. எனினும் சமகால நவீன இலக்கியம் சார்ந்த படைப்புப்போலன்றி இது முற்பட்ட பல்லவர்கால பக்தி இலக்கியத்துடனும் தொடர்புபட்டிருப்பது வெளிப்படையானது. 

பல்லவர்கால பக்திப்பாடல்களில் இப்பாடல்களில் இடம்பெறும் தெய்வங்களான விநாயகர், சிவன். முருகன், விஸ்ணு, வைரவர், நரசிங்கர், வீரபத்திரர், கண்ணகை, மாரி, காளி, பேச்சி, மீனாட்சி, காமாட்சி, கடலாட்சிபோன்றவர்கள் முக்கியம் பெற்றதில்லை. 

ஈழத்தில் கூட பிறபிரதேசங்களில் இத்தகைய தெய்வங்கள்மீது பாடப்படுவதில்லை என்பது முதலில் மனங்கொள்ள வேண்டியதாகின்றது. இவ்விதத்தில் எப்பொழுதும் எங்கும் பாடப்பட்டு வெளிவராத மொத்தமாக மூவாயிரத்து பத்துப்பாடல்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றிமுற்பட்டகால எழுத்து இலக்கியங்கள் போன்று பத்ததியாக ஏட்டில் வழங்கப்பட்டனவாகவும் மட்டக்களப்பு பிரதேசத்தில் இத்தகைய பாடல்மரபு காணப்படுகின்றது. இவ்வாறான முன்னோடிப்பாடல் தொகுப்பொன்று "மகாமாரி திவ்விய பிரபந்தம் 1970இல் திரு.சி.கணபதிப்பிள்ளை (அட்டைப்பள்ளம்) என்பவரால் நூலுருப் பெற்றுள்ளது. இந்நூலிலுள்ள பாடல்கள் யாரால்? எப்பொழுது? பாடப்பட்டதென்பது தெரியாத ஒருதொகுப்பு நூலாகும். 

இவ்வாசிரியர் ஊரூராகச்சென்று ஏற்கனவே பாடிய பாடல்களைத் தொகுத்தே வெளியிட்டிருப்பது வெளிப்படை ஆனால், இறையின்பப்பாவாரம்" பாடல்கள் யாவும் ஆரையூர் அருள் அவர்களால் கடின உழைப்பால் இயற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

நூலாகவிருப்பது விதந்துரைக்கத்தக்கது. பல கோவில்கள் மீது பாடப்பட்டுள்ளன. இவ்விதத்தில் மொத்தமாக 3010பாடல்கள் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் சில, "பேருலவு பெரிய போரதீவு தன்னில் பெருமை யுறக் கோவில் கொண்டமர்ந்த பத்திரகாளி மேல் கும்மிபாடுவதற்கு முத்துலிங்க விநாயகர் காப்பாமே என்றவாறு காப்புச்செய்யுளுடன் ஆரம்பிக்கின்றன. மேலும் சில, தல வரலாறு பற்றிக்கூறுகின்றன. 

"மாந்தைமானகரை ஆண்டிருந்த பேரரச விஸ்வதேவன் தன்னைந்து பேரரிய பெண் பிள்ளைகளை பஞ்ச வாச்சாரியார்க்கு மணம் செய்தனரே." வர்ணனையாகவுள்ளன சில, ஆறு கிராமங்கள் சேர்ந்து நிருவகி பேறுபெற்ற செட்டி பாளையத்தே . நீர்கொண்ட வம்மர நிழலுறை பார்புகழ் கண்ணகை நீயேயம்மா." அருட் சிறப்புப்பற்றித் தொடர்கின்றன. "அன்பு வடிவம் ஆனவளே - காளி அறம் வளர்த்த அன்னையாளே துன்பக்கடலிலே மூழ்கிட முன்னரே தோணியாய் வந்து துணைபுரிவாய் ஆலய அமைப்புப்பற்றி விபரிக்கின்றன 

"மட்டக்களப்பு வாவியோடிக் கூடி வங்கக் கடலோடு சங்கமிக்கும்) அமிர்தகழிப் பதி தேடியமர்ந்த ஆனைமுக வப்பனைப் பாடிடுவோம்" சில தலங்களில் அதிகாலையில் நடப்பவை பற்றிக்கூறுகின்றன. "நாளும் அதிகாலை வேளையிலே நாவற்குடா கங்காணியார் கோவிலிலே இவ்விதத்தில் அதிக பாடல்கள் கொண்ட முன்னோடி கூறிடு நற்சிந்தனை கேட்ட விசேடமாக பின்னரே  ஊரார் பணிசெய்யச் செல்வாரடி" பல மாறிப் புதுமைகள் பற்றி எடுத்துரைப்பன. "கந்த புராணத்திற்குப் பதிலாயிங்கு திருச்செந்தூர்ப் புராணமே படித்து பொருள் விளங்கப்பயன்கூறும் புதுமையை மண்டூர் பதியிலே கண்டிடலாம். 

சமய நிலையில் தலங்கள் சிலவற்றின்முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றன. "கேதாரகௌரி விரதத்திற்கு - என்றும் ஆதாரமிக்ககாளி கோவிலென்று நூற்றியென்பது வருடங்களாய் நோற்றுவார் மக்கள் விரதமிங்கு ஈழத்தில் வேறு இடங்களில் காணமுடியாதவாறுள்ள விசேடமான சடங்கு வெளிப்படுத்தப்படுகின்றன. முறைபற்றி "வேலூர் பத்திரகாளி விசேடம், ஆகமமுறைப்படியும், பத்ததி முறைப்படியும் பூசை, சடங்குகள் நடப்பது என்பது அத்தகைய விடயங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். சடங்குகளில் பாடப்படும் பாடல்களில் மட்டுமின்றி, பஜனைப் பாடல்களாக அளிக்கை செய்யப்படுகின்றனவும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

 ஈழத்திலெழுந்த வேறெந்தப் பக்திப்பாடல்களையும் விட சமகால பிரச்சினைகள் சிலவற்றை வெளிப்படுத்துவது தனித்துவங்களுள் தலையானது. இத்தொகுப்பின் 'அதர்மம் தலை தூக்குதம்மா கண்ணகித்தாயே தர்மம் காக்க மனமில்லையோ ஆஸ்த்தி அழியுதம்மா ஆச்சியேகாருமம்மா எல்லை பறிபோகுதம்மா தொல்லைதனைத்தீரும்மம்மா சீலம்மிகுபௌத்த அவதாரம் எடுத்து புனித சித்தாத்தர் போதனைச் சிதைத்து சனநாயகப் போர்வை போர்த்து ஏய்க்கார் | கேசவனே கேடு செய்த இராவணனும் போர்க்களத்தில் நிராயுதனாய் நின்றபோது இன்றுபோய் நாளைவா என்றுரைத்தாய்.. பாம்பணையில் பள்ளிகொள்ளும் பச்சைமாலே தேம்பியழு எங்கள் துயர் துடைக்கவா வா தமிழர்தம் பண்பாடு செழிக்கும்படி வேண்டுவன சில தாரோங்கு கலைஞானம் தரணியில் வாழ தன்னருளாம் ஓங்காரா வுன்தாள் போற்றி இத்தொகுதிப் பக்திப்பாடல்களின் தனித்துவமான சிறப்புகளை மேற்கண்டவாறு வெளிப்படுகின்றது. 

இனி,இப்பாடல்களின் எடுத்துரைப்பு முறைபற்றிக் கவனிக்கலாம். பாடல்வடிவம் என்று நோக்கும்போது, மரவுவழிப்பட்ட, கும்மி, காவடி, அகவல், காவியம், தாலாட்டு,ஊஞ்சல்,கரகம்முதலியவற்றொடு,அவ்வழி சேராத திருப்பள்ளியெழுச்சி முதலானவையும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. எல்லாப்பாடல்களுமே இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சில தொகையறா, பல்லவி. அனுபல்லவி. சரணங்கள் என்றவாறு பகுப்பு நிலையிலும் வெளிப்பட்டுள்ளன. 

மைலம்பாவெளி காமாட்சி இசைச் செழுமை கருதி சில பாடல்கள் வித்தியாசமான பாடல் முறையில் வெளிப்பட்டுள்ளன. "மயிலம் பாவெளி சன்னிதி வந்த போதிலே -காமாட்சி கவிதந்தால் இசையோடு எந்தன் நாவிலே பாடுவோம் வாரீர் சூடுவோம் வாரீர் - பாமாலை சூடுவோம் வாரீர் சில பாடல்களிலே பேச்சிமொழி உணர்ச்சி பூர்வமான வெளிப்படுத்துகின்றது. கூடும் அடியவர்க்கும் - காளி பாடும் பாவணருக்கும் நாடும் வரமளிக்க - ஆத்தா தேடி ஓடீ வருவா" "வேப்பிலை கைபிடித்து - காளி வேதனை தீர்த்திடுவா கூப்பி கரம் தொழுதா-அத்தக் தூக்கி துயர்த்துடைப்பா" மாசி மாதம் கண்ட உத்தமரு நம்ம மாமாங்க தேசிகரு அறிந்திடுதம்பி - அவர் வாசம் வீசுது நேசமெல்லாம் புரிந்திடுதம்பி) இடம்பெறுவது நெருக்கத்தை இத்தகைய பாடல்களின் இனிமை, ஓசை, சந்தம், எளிமை என்பவற்றிற்கு எடுத்துக்காட்டுக்கள் இவ்வாறு இறையின்பப் பாவாரத்திலுள்ள அனைத்து பாடல களும   ஒன்றையொன்று மிஞ்சி நிற்பத பாவலரின் புலமைத்துவத்தைப் பறைசாற்றி நிற்கின்றன. 

திருமூலர் 3000திருமந்திரங்களைக் கூட கூடுவிட்டு கூடு பாய்ந்து ஒருவருடத்திற்கு ஒருபாடலாக பாடியதாக அறியக்கிடைக்கின்றது. ஆனால் இப்பாவலர் 3010 பாடல்களையும் பாடியிருப்பது, இதுவரை இலங்கையிலோ, இந்தியாவிலோ, நானறிந்தவரை வேறு பக்தியிலக்கிய நூல்கள் வெளிவரவில்லையென்பது ஈன்று குறிப்பிடத்தக்கது. 

தமது சிறப்புரையில் இந்நூலானது ஆசிரியர் ஆரையூர் அருளின் வாழ்நாள் வரலாற்றுச் சாதனை" எனக்குறிப்பிட்டிருப்பது மிக மிகப் பொருத்தமான கூற்றாகும். கவிஞர் தமிழ்மாமணி அகளங்கன் 25ஆகஸ் 2019 தமிழ்தந்தியில் இறையின்பாவாரம் ஒரு வரலாற்று பொக்கிசம் தலைப்பிட்டு இந்நூல் இந்த நூற்றாண்டில் ஈழத்தில் வெளிவந்த மிகப்பெரும் கவிதை நூல் என்றும் அவரது அறிமுகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளமை மனக்கொள்ளத்தக்கதாகும்.