20 புதிய தாதிய உத்தியோகத்தர்களுக்கான திசைகோட்படுத்தும் செயலமர்வு

 








( வி.ரி.சகாதேவராஜா)
 சுகாதார அமைச்சினால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு  இவ்வாரம் நியமிக்கப்பட்ட 20 புதிய தாதிய உத்தியோகத்தகர்களுக்கான திசைகோட்படுத்தும் செயலமர்வு நேற்று முன்தினம் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் பொன்னுச்சாமி ஸ்ரீ சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  தர மேம்பாட்டுக்கான வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். ராகுலன்  , தாதிய பரிபாலகர் ந.சசிதரன் ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினார்.

இதன்போது, புதிதாக அங்கு நியமிக்கப்பட்ட தாதிய பரிபாலகிகளான திருமதி கௌரி நவதீதன் மற்றும் திருமதி மதிவதனி விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.