மூவலூர் இராமாமிர்தம் அவர்கள் தமிழ்நாட்டில் பெண்
சமூக சீர்திருத்தவாதி,
எழுத்தாளர்,
தேவதாசி ஒழிப்பு இயக்கப் போராளி,
திராவிட இயக்க அரசியல் செயற்பாட்டாளர்.
மூவலூர் இராமாமிர்தம்
இவர் திருவாரூர் மாவட்டம் #கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள "#பாலூர்" என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் வளர்ந்தது மூவலூர் இதனால் இவர் மூவலூர் இராமாமிர்தம் என்று அழைக்கப்படுகிறார்.
சென்னை மாகாணத்தில் #தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். 1936இல் வெளியான புதினமான #தாசிகளின்_மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.
காங்கிரசின் ஆதரவாளராக இருந்த இவர் 1925 இல்
#பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறிய போது பெரியாருடன் வந்து, சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார் .
1930இல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முயற்சிக்குத் துணை நின்றார். ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
#1938_இந்தி_எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்று, நவம்பர் 1938இல் ஆறு வாரங்கள் #சிறையிலடைக்கப்பட்டார்.
அவரது புதினம் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் தேவதாசி முறையை ஒழிக்க அவர் மேற்கொண்ட தொடர் சொற்பொழிவுகளும் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற வழிவகுத்தன. 1947இல் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் நிறைவேறியது.
1949இல் பேரறிஞர்
அண்ணா தி.மு.க. தொடங்கிய பின் இராமாமிர்தம் அவர்கள் அதன் ஆதரவாளரானார். 27.06.1962இல் அவர் மறையும் வரை தி.மு. க ஆதரவாளராகவே இருந்தார்.
1989ஆம் ஆண்டு #கலைஞர் முதலமைச்சராக இருந்த போது 8ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி உதவித் திட்டத்திற்கு #மூவலூர்_இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்று பெயரிடப்பட்டது.
அதுவே இப்போது #அரசுப்_பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு பட்டயம், பட்டப் படிப்புகள் முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000/- அளிக்கப்படும் திட்டத்திற்கு #மூவலூர்_இராமாமிர்தம்_அம்மையார்_உயர்கல்வி_உறுதித்_திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
#இராமாமிர்தம் அம்மையார் வாழ்க்கை வரலாறு படித்தறிதற்கு உரியதாகும்.
நன்றி: வங்கனூர் அ.மோகனன்
பெண்கள் மாநாட்டில்
ஈ. வெ. ரா
அவர்களுக்கு
அன்போடு #பெரியார் என்று பட்டமளித்த நாள் இன்று





