வி.ரி. சகாதேவராஜா)
தேசிய உற்பத்தித்திறன் விருது(NPA) 2025/26 விருது (Public Sector) பிரிவில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.
அதனை முன்னிட்டு பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு இன்று (01.10.2026) பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் இம்மகத்தான சாதனைக்கு பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



.jpg)





