சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு கதிரவன் கலைக்கழகம் நடத்திய சிறுவர் தின நிகழ்வு கொக்கட்டிச்சோலை கவின் பாலர் பாடசாலையில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
சோலையூரான் ஆ. தனுஷ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கதிரவன் தலைவர் கதிரவன் த. இன்பராசா, கொக்கட்டிச்சோலை ஊர்ப்போடி திருச்செல்வன் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் பங்குபற்றினர்.
பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள், மாணவர்களுக்கான பரிசளிப்புகள், விருந்தினர் உரைகள் என சிறப்பாக இடம் பெற்ற இந்நிகழ்விற்கு கதிரவன் கலைக்கழகம் தனது 50 ஆவது ஆண்டு பொன்விழாவினை முன்னிட்டு அனுசரணை வழங்கியிருந்தமே குறிப்பிடத்தக்கது.








.jpeg)
.jpeg)

.jpeg)






