மட்டக்களப்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி கனடா சாயி இல்லத்தின் ஏற்பாட்டில் உதவித் திட்டம் முன்னெடுப்பு

 

 







கனடா சாயி இல்லத்தின் மூலம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும்  குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்றது. 

அந்த வகையில் மட்டக்களப்பு  மாவட்டத்தில் வாகரை  பிரதேச செயலாளர் பிரிவில் குஞ்சன்குளம் கிராமத்தில்  வறுமை கோட்டின் கீழ் வாழும்  குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு  இடம் பெற்றது. 

இந்நிலையில்  ஐயாயிரம் ரூபாய்  பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் கனடா சாயி இல்ல பிரதிநிதிகளான திருமதி.ரவிச்சந்திரன், ர.யாதவன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்