சிறுவர் நலன் முதல் பால்நிலை வன்முறை தடுப்பு வரை – மண்முனைப்பற்றில் முக்கிய கூட்டம்

 






 





மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச சிறுவர் அபிவிருத்தி,  உளநல சம்மேளனம் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுக்கும் வலையமைப்பு குழுக்களின் மூன்றாம்  காலாண்டுக்கான கூட்டம் - 2026

எமது செயலகப் பிரிவின் மேற்படி கூட்டமானது 25.09.2026 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப.10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
 இக்கலந்துரையாடலில்  உதவிப்பிரதேச செயலாளர் திரு.கி.இளம்குமுதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  திரு.அ.சுதர்சன், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி திரு.எஸ். சிவலக்‌ஷன், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள்பிரிவு பொறுப்பதிகாரி,  மட்டக்களப்பு வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர்,  மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி, மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கோட்ட ஆசிரிய ஆலோசகர்,  சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்,  உளவளத்துணை ஆசிரியர்கள் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு  உத்தியோகத்தர்கள், மகளிர் மகாசங்க உறுப்பினர்கள் அத்தோடு அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திலே பிரதேசத்தின் சிறுவர்களின் கல்வி,  சுகாதாரமும் போசனையும், பாதுகாப்பு பராமரிப்பு, போதைப் பொருள் பாவனையினால் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றமை, உளவியல் மற்றும் சமூக தேவைகள், பெண்கள் பாதுகாப்பு பராமரிப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் பல ஆக்கபூர்வமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர்  நன்றியுரையுடன் கூட்டம் இனிதே  பி.ப.12.00 மணியளவில்  நிறைவு பெற்றது.