கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் PSDG வேலைத் திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாடசாலை மாண வர்களுக்கான குறுந் திரைப்படம் திரையிடலும் கதையாடலும் நிகழ்வின் 1வது நிகழ்வானது 29.09.2026 திகதி மட்/ மம/காங்கேயனோடை அல்-அஹ்ஷா வித்தியாலய மாணவர்களையும் மட்/மம/ ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலயாலய மாணவர்களையும் இணைத்து மட்/மம/காங்கேயனோடை அல்-அஹ்ஷா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது.
2வது நிகழ்வானது மட்/ மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் பாடசாலைகளின் உப அதிபர், ஆசிரியர்கள், கலாசார உத்தியோகத்தர், கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 150 பேர் கலந்து கொண்டனர். இதில் திரைப்படங்களின் ஊடாக உணர்த்தப்படும் கருத்துக்கள் பற்றியும் கூறப்பட்டதுடன் மாணவர்களின் கருத்துக்களும் அவர்களால் வைக்கப்பட்டது.











