வரதன் ஒற்றுமையாக ஒன்றிணைவோம் எமது நாட்டை கட்டி எழுப்புவோம் என்னும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி என்னும் கருத்திட்டத்திற்கமைவாக மட்டு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட பிரதான நிகழ்வு இன்று வெட்டுக்காடு பொதுச் சுகாதாரப் பிரிவில் மட்டு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம் பெற்றது இதன் போது இப்பகுதியில் கடந்த பல வருடங்களாக துப்புரவு செய்யப்படாத வடிகான்கள் தூய்மைப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது இந்த தேசிய நிகழ்ச்சி திட்ட ஆரம்ப நிகழ்விற்கு மட்டு மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் மாநகர சபையின் உறுப்பினர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் கடந்த காலங்களில் இப்பகுதியில் வெள்ள அனர்த்தங்களின் போது இந்த வடிகான்கள் தூய்மைப் படுத்தப்படாமல் காணப்பட்டதால் இந்தப் பொதுச் சுகாதாரப் பகுதியில் டெங்கு குடம்பிகள் பரவுவதற்கான காரணமாக இருந்தது தற்போது இந்த தேசிய தூய்மை தின நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இப்பகுதி பூரணமாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது
.jpeg)

.jpeg)
.jpeg)






