இலங்கையில் கட்டாயமாகிறது TIN இலக்கம்- தேசிய அடையாள அட்டையை விடவும் இந்த TIN இலக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது

 



இலங்கையில் எதிர்காலத்தில் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக மாறும் என வரி மற்றும் முகாமைத்துவ ஆலோசகர் ஏ.ஜி.எஸ்.சுவாமிநாதன் சர்மா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தாங்கள் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் தங்களுக்கான TIN இலக்கத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
அவ்வாறு இல்லாவிடில், அரச சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஊடாகவும் இதனைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும், ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கும் தேசிய அடையாள அட்டையை விடவும் இந்த TIN இலக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.