இன மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கதிர்காமக் கந்தனின் வருடாந்த கொடியேற்ற உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கதிர்காமம் நோக்கி புனித பயணத்தை மேற்கொண்டுள்ளனர்
இதேவேளை இவ்வாறு புனித பயணம் மேற்கொள்வோர் இன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பிள்ளையாரை வணங்கி தமது பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டி சிதறு தேங்காயை உடைத்து காவியம் பாடி நெய் விளக்கேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டு தமது புனித பயணத்தை ஆரம்பித்தனர்
இதேவேளை கதிர்காமக் கந்தனின் கொடியேற்றத்துக்காக கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக முருகப்பெருமானின் புனித யாத்திரையின் போது அவரது திருவருளையும் அதிசயங்களையும் கண்டறிந்த முருக அடியார்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்