பிரேசில் நாட்டில் நூறு வயதை கடந்து வாழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் கின்னஸ சாதனை படைத்துள்ளனர்.

 

வெளிநாடொன்றில் நூறுவயதை கடந்து வாழும் மூன்று சகோதரிகள்: கின்னஸ் சாதனை | Three Sisters Live To Be Over A Hundred Years Old

பிரேசில் நாட்டில் நூறு வயதை கடந்து வாழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் கின்னஸ சாதனை படைத்துள்ளனர்.

அதாவது உலகின் மிக வயதான உயிருள்ள உடன்பிறப்பு என்ற வகையிலேயே இந்த கின்னஸ் சாதனையை மூவரும் படைத்துள்ளனர்.

ஆரோக்கியமான உணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவையே தங்களது நீண்ட ஆயுளுக்குக்கு காரணம் என்று சகோதரிகள் தெரிவித்தனர். 

 எனினும் உடல்நலத்தை பேணுவதில், சுற்றுச்சூழல் தாக்கங்களை விட மரபுவழி காரணிகள் அதிக பங்காற்றியிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த மூவரது நீண்ட ஆயுளுக்கான மரபியல் காரணங்களை அறிந்து கொள்ள சாவோ பாலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் ஆராய்ச்சியில் ஈடுட்டுள்ளார்.