வங்கியின் மீது வைத்த நம்பிக்கையைச் சிதறடித்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கண்டியில் உள்ள பிரபல தனியார் வங்கியில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? 
மாஸ்டர் பிளான் - வங்கியின் ரகசிய ஆவணங்களை லாவகமாகப் பயன்படுத்திய 7 ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்களைத் தயாரித்து கடன்களைப் பெற்றுள்ளனர்.
சிக்கியது எப்படி?
வங்கியின் உள்ளக தணிக்கையில் இந்தத் தில்லுமுல்லு கண்டுபிடிக்கப்பட, உடனடியாக பொலிஸார் களமிறங்கினர்.
அதிரடி கைது - கண்டி குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி வேட்டையில், வங்கி அதிகாரிகள் உட்பட 7 பேர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கியில் பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.
உங்கள் கணக்குகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ள இந்த மோசடி கும்பலின் பின்னணியில் இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை தொடர்கிறது





