இலங்கையின் கராத்தே கலை ஜாம்பவான் மறைந்த ஷிகான் ராமச்சந்திரன் நினைவாக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி!

 











இலங்கை ராம் கராத்தே ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கராத்தே கலையின் ஜாம்பவானும் அகில இலங்கை shotokan சம்மேளனத்தின் தலைவருமாகிய மறைந்த ஷிகான் ராமச்சந்திரனின் நான்காவது வருட ஞாபகார்த்தமாக கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி நேற்று (18) சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இலங்கை ராம் கராத்தே சம்மேளன தலைவர் ஷிகான் கே.சந்திரலிங்கம் தலைமையில், சம்மேளனத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர்
ஷிகான் கேந்திரமூர்த்தி கந்தசாமி முன்னிலையில் நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் இரா.முரளீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ.ரூபசாந்தன் உள்ளிட்ட இதர அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கடந்த கால விளையாட்டு உபாதைகளுக்கான இயன் மருத்துவ சேவைகளை வழங்கியமைக்காக இயன் மருத்துவர் கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் நினைவு சின்னம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் பயிற்றுவிப்பாளர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
திருகோணமலை அம்பாறை மட்டக்களப்பு உள்ளிட்ட 12 மாவட்ட கராத்தே அணிகள் போட்டியில் பங்கேற்றன.
 
 
 ( வி.ரி.சகாதேவராஜா)