ஈரான் மீது நடைபெறும் தாக்குதல்களை நிறுத்தி போருக்கு முடிவு காண வேண்டுமானால், இனி எதிர்காலத்தில் தாக்குதல் நடக்காது என்பதற்கான உறுதி அவசியம் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை அவர், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் Yvette Cooper உடன் நடத்திய தொலைபேசி உரையாடலில் கூறியுள்ளதாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் கூறுகையில்,
சாதாரண நிலைக்கு திரும்புவதற்கான பாதை இந்த தாக்குதல்களை நிறுத்துவதில்தான் உள்ளது.
போர் நிறுத்தம் போது எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடக்காததற்கான உத்தரவாதங்களுடன் இருக்க வேண்டும்.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக எந்த நாடும் செயல்படக்கூடாது என்று எச்சரித்த அவர், அத்தகைய செயல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என கூறினார்.
மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பிரிட்டன் இராணுவ ஒத்துழைப்பை தவிர்க்க வேண்டும் என்றும், அமெரிக்காவுக்கு இராணுவ தளங்களை வழங்குவது போரில் பங்கேற்பதாகக் கருதப்படும் என்றும் விமர்சித்தார்.
ஈரான் தனது இறையாண்மை மற்றும் சுயாதீனத்தை பாதுகாக்கும் உரிமை உள்ளது எனவும், தாங்கள் தூதரக முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோதும் தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், South Pars எரிவாயு வளாகம் மீது நடந்த தாக்குதலை கண்டித்து, சர்வதேச அளவில் போதிய கண்டனம் இல்லாதது குறித்து கவலை தெரிவித்தார்.





