“அனர்த்த அவசர சேவை மற்றும் தேவைகள்” எனும் தொடர்பில் ஓட்டமாவடி டைவர்ஸ் பார்க்கில் கலந்நுரையாடல்.




“அனர்த்த அவசர சேவை மற்றும் தேவைகள்” எனும் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மையம் (Disaster Management Center) மற்றும்
மூவ் கல்குடா டைவர்ஸ் அமைப்பினருக்கிடையிலான சந்திப்பும் கலந்நுரையாடலும்  ஓட்டமாவடி டைவர்ஸ் பார்க்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி:
மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ மைய பிரதிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஸியாத், 
மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ அதிகாரி எம்.எஸ்.எம்.சிம்ரி மற்றும் மூவ் கல்குடா டைவர்ஸ் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி எஸ்.எம்.ஏ.காதர்  – (ஊடக இணைப்பாளர்), ஜவ்ஃபர் (துணைத்தலைவர் - டைவிங் சேவைகள்), நஃபீர் (பிரதான ஒருங்கிணைப்பாளர்), ஃபஜீர் (மீனவர் பாதுகாப்பு பொறுப்பாளர்), அஸ்மின் (செயலாளர்-யானை பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு விவகாரங்கள்),
முஹாஜிர் (உயிர்காப்பு நீச்சல் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன் போது, அனர்த்த காலங்களில் அவசர சேவைகள் வழங்கும் முறை, டைவிங் மற்றும் உயிர்காப்பு குழுக்களின் பங்கு, மீட்பு நடவடிக்கைகளில் காணப்படும் சவால்கள், தேவையான வளங்கள் மற்றும் பயிற்சி தேவைகள், அரச நிறுவனங்களுக்கும் சமூக அடிப்படையிலான மீட்பு அமைப்புகளுக்குமிடையிலான ஒருங்கிணைப்பின் அவசியம் என்பன போன்ற விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. 

அத்துடன், மூவ் கல்குடா டைவர்ஸின் பிரதிப்பணிப்பாளர்
எம்.எம்.முபாரக் அவர்களின் ஆலோசனையுடன்,
அமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகளின் இணைந்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்காப்பு (Life Saving) பயிற்சிநெறியை ஒழுங்கமைப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

இப்பயிற்சிநெறி மாவட்டத்தின் அனர்த்தத் தயார்நிலையை வலுப்படுத்துவதற்கும், அவசர எதிர்வினைத்திறனை மேம்படுத்துவதற்குமான
ஒரு முக்கியமான நடவடிக்கையாக அமையும்.

இக்கலந்துரையாடல் அரச நிறுவனங்களுக்கும் சமூக அடிப்படையிலான மீட்பு அமைப்புகளுக்குமிடையிலான
ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் மாவட்ட மட்டத்தில் அனர்த்த அவசர சேவைகள் மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்குமான
ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைந்தது.

 

 ந.குகதர்சன்