மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் தலைமையில் நடைபெற்ற மகாசிவராத்திரி நிகழ்வு

































இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம், ஆரையம்பதி ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயம், பிரதேச அறநெறிப் பாடசாலைகள் ஆகியன இணைந்து நடாத்திய மகா சிவராத்திரி நிகழ்வு , பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் நேற்று முன்தினம் (15) ஆலய  பூசையுடன் சிவனேஸ்வரர் ஆலயத்தில் ஆரம்பமாகியது.

இதில்  நந்திக்கொடி ஏற்றல், மங்கல விளக்கேற்றல், அறநெறிக் கீதம் இசைத்தல், இறைவணக்கம், வரவேற்புரை என்பவற்றுடன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளின் ஆற்றுகைகளும், ஆரையூர் கலாமன்ற கலைஞர்களின் பக்திப் பாடல்களும் அரங்கேற்றப்பட்டன.