மட்டக்களப்பு மாவட்டத்தில் சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான காசொலைகள் வழங்கி வைப்பு.

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவில் புனானை கிராம சேவகர் பிரிவில் கடந்த (05) திகதி விசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான காசொலைகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார் ஒருங்கினைப்பின் கீழ் இரண்டாம் கட்ட கொடுப்பனவுகளானது அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் இ.கமல்ராஜ் மற்றும் கிராமசேவகர் எஸ்.தெய்வேந்திரன் ஆகியோரினால் (22) திகதி வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஆரம்பமாகியுள்ள நிலையல் சூழல் காற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் நேரடி கள விஜயம் மேற்கொண்டு பாதிப்புக்கை இனம் கண்டு தெரிவு செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை திருத்துவதற்காக துரிதமாகஇக் காசோலைகள் வழங்கப்பட்டன.

 சுழல் காற்றினால் இப்பிரதேசத்தில் 16 வீடுகள் அதிகளவான சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்