“அனைவருக்கும் சமாதானம் மற்றும் சுபீட்சத்தை விரும்பி” எனும் தொனிப்பொருளில் தேசிய தீபாவளி விழா ஹட்டனில் இடம்பெற்றது.

 


பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் “அனைவருக்கும் சமாதானம் மற்றும் சுபீட்சத்தை விரும்பி” எனும் தொனிப்பொருளில் தேசிய தீபாவளி விழா ஹட்டனில் இன்று (19) இடம்பெற்றது.

பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெற்ற இந்த தேசிய தீபாவளிப் பெருவிழாவின் பிரதான பூஜைகள் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இந்துக் கோவிலில் தலைமைக் குரு சன்மதுர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பௌத்த மத அலுவல்கள் மற்றும் கலாசார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுளா சுரவீர, கிருஷ்ணன் கலைச்செல்வி, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், ஹட்டன் டிக்கோயா நகர தலைவர் கருணாரத்ன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தேசிய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார ஊர்வலம் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவாலயத்திற்கு எதிரில் இருந்து ஹட்டன் பிரின்ஸ் மண்டபம் வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.