மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பதின்மூன்று உழவு இயந்திரங்களை பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

 


மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள்ளபிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பதின்மூன்று உழவு இயந்திரங்களை அரந்தலாவ பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் அந்த உழவு இயந்திரங்களின் சாரதிகள் பதின்மூன்று பேரும் கைதுசெய்யகப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

அரந்தலாவ பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகளும் கரடியனாறு பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இந்த சட்டவிரோத மணல் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு – முந்தினி ஆற்றிலிருந்து மணல் அகழப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மணலை அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச்சென்றவேளை விசேட அதிரடிப்படையினர் உழவு இயந்திரங்களை கைப்பற்றி கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 22 ஆந்திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.