“வாசிப்பு வழியாக வளர்ச்சி : அறிவு வழியாக முன்னேற்றம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தைச்சிறப்பிக்கும் வகையில் வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் பல்வேறு வாசிப்பு ஊக்க நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

பாடசாலையின் 15 வகுப்பறைகளிலும் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில், “சிறந்த வாசிப்பு மாணவர்” என்ற அடிப்படையில் தேர்வுப்போட்டி நடத்தப்பட்டது.

முதல் சுற்றில் ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் இடம்பெற்ற இறுதிச்சுற்றில் ஒரு வகுப்பில் ஒருவர் வீதம் மொத்தம் 15 சிறந்த வாசிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த வாசிப்பாளர்களுக்கான பரிசுகள் சிறுவர் தினத்தில் நடைபெற்ற விசேட காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.

மாணவர்கள் வாசிக்கும் போது,
குரல் தெளிவு,
உயிர்-மெய் குறிகளைச்சரியாகப் பயன்படுத்துதல்,
நயந்த ஒலியுடன் வாசித்தல்என்ற அடிப்படைகளில் மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வு பாடசாலை ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்புடன், வித்தியாலய முதல்வர் யூ.எல்.எம்.ஷல்மானுல் ஹரீஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் தொழிலதிபர் ஏ.அய்யூப் ஹாஜியார் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச்செயலாளர் எம்.எம்.எப்.இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

அத்துடன், எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுப்பொருட்களும் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.

  ந.குகதர்சன்