கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் "கிழக்கின் சிறகுகள் "2025 எனும் தொனிப் பொருளிலான கண்காட்சியை நேற்று மாலை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்ன சேகர பாசிக்குடா கடற்கரையில் வைப்பவர் ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள். திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றன .
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சி ஆனது 19ஆம் திகதி முடிவடைய உள்ளது.
அருகி வருகின்ற இன குழுமங்களுடைய கலை.கலாச்சாரங்களை மேம்படுத்துவது மறைந்து செல்கின்ற பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை மேம்படுத்துவது மற்றும் பாரம்பரியமாக எமது மக்கள் வாழ்வியலிலே பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய பொருட்கள் பற்றியும் அடங்கிய மூன்று விடயங்கள் உள்ளடக்கியதாக சிறகுகள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு.கலந்து கொண்டார்.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயந்தி திருச்செல்வம் கோறளைப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் உதவி பிரதேச செயலாளர் திருமதி டிபேக்சினி சசிதரன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் அன்ரன் டிலெக்ஸ் கொஸ்ரா.கிழக்கு சுற்றுலா மேம்பாட்டு பணியாக தலைவர் எம். ஜி .பிரியந்த.இலங்கை சுற்றுலா அதிகார சபை விடுதிகள் பணிப்பாளர் எம்.எச்.எம்.மாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.