மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்த வீதியில் அமையப்பெற்றிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று திங்கள் கிழமை 26.05.2025. மாலை வாஸ்து சாந்தியுடன் சுப முகூர்த்த வேளையில் ஆரம்பமாக உள்ளது .
தொடர்ந்து ஐந்து நாட்கள் அலங்கார உற்சவம் இடம் பெற உள்ளது
தினமும் மாலை 6.00. மணிக்கு மூலவர் அபிஷேகம் இடம் பெறும்.
2025.05.30. அன்று வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவம் நடைபெறும் .
அதனைத்தொடர்ந்து 2025.06.௦1 வைரவர் பூஜை இடம்பெறும் .
2025.05.26. தீர்த்தம் அன்று பகல் அன்னதானம் வழங்கப்படும் .
பூஜை வழிபாடுகள் யாவும் சிவஸ்ரீ சி .குகநாத ஐயா தலைமையில் இடம் பெறும் .
அடியவர்கள் பூக்கள் ,பூமாலைகள் பால் கரும்பு , இளநீர் ஆகியன வழங்கி வைக்க முடியும் . பக்த அடியார்கள் வருடாந்த ஆலய அலங்கார உற்சவத்தில் பங்கேற்று ஸ்ரீ முத்தி விநாயகரை தரிசித்து திருவருள் பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.







