மட் /மம/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)ன் சமூக உணர்ச்சிக்கான கற்றல் செயற்றிட்டத்தின் கீழ் தரம் 08, 09 மாணவர்களுக்கான Socio - Emotive Learning programe 24.08.2024 ம் திகதி ஓட்டமாவடி முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலில் கல்லூரி முதல்வர் அல்-ஹாஜ் MA.ஹலீம் இஸ்ஹாக் (SLPS - 1) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது இந்நிகழ்வின் வளவாளர்களாக கோளைப் பற்று மத்தி வாழைச்சேனை MOH Dr. நஜீப்கான் Sir, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உளவள மற்றும் மனிதவள ஆற்றுப்படுத்தல் உத்தியோத்தர் MTM. அஸ்மி (BA) அவர்களும், கல்குடா ஜம்மியதுல் உலமா கல்குடா கிளையின் செயலாளர் ஆசிரியர் அல்-ஹாபிழ் M. இஸ்ஸத் (நஹ்ஜி) அவர்களும் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர்.
பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி FSA. றஷ்மி அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாசாலையின் பிரதி அதிபர் AB . அஸ்மீர் Sir உதவி அதிபர் AG. அஸீஸுல் றஹீம் Sir, சிரேஷ்ட ஆசிரியர் AL. இப்றாஹிம் Sir, தரம் 8ன் பகுதித் தலைவர் ULM. தெளபீக் Sir மற்றும் தரம் 8, 9ன் வகுப்பாசிரியர்கள், சிரேஷ்ட மாணவத் தலைவர், மற்றும் எனைய மாணவத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்