வரதன்
கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு சமூக நலத் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது சுற்றாடல் எம்மை காக்கும் நாம் சுற்றாடலை காப்போம் என்னும் செயத்திட்ட த்தின் ஊடாக வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் பசுமை மாதிரி இல்லம் திறந்து வைக்கப்பட்டதுடன் மக்களுக்குப் பயன் தரும் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு வவுனதிவு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்யானந்தி தலைமையில் இடம் பெற்றது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் டி. தர்ம தாச கலந்து கொண்டு சுற்றாடலை காப்போம் என்னும் செயத்திட்டத்தின திறந்து வைத்தார். சிறப்பு அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் கலந்து கொண்டார். அரசாங்க அதிபரினால் பொதுமக்களின் பார்வைக்காக பசுமை மாதிரி இல்லம் திறந்து வைக்கப்பட்டது
இதன் சிறப்பான பயன் தரும் செயல் திட்டத்தின் ஊடாக பொது மக்களுக்கு மலிவான விலையில் இந்தப் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதுடன் தொற்ற நோய்களிலிருந்து பொதுமக்களைக் காக்க நஞ்சற்ற உணவு வகை களை மலிவான விலையில் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்
பசுமை மாதிரி இல்லம் இதில் மூலிகை வகைகள் கீரை வகைகள் மரக்கறிகள் பூ மரக்கன்றுகள் என்ன பல வகையான பலமரக்கன்றுகள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்விற்கு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள் வவுணதீவு பிரதேச செயலாக உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.