தொலைத்தொடர்பு கம்பிகளை நீண்ட நாட்களாக களவாடிய நால்வர் மஸ்கெலியா பொலிஸார் நேற்று மாலை கைது செய்து உள்ளனர்.
இவ்வாறு கைது செய்யபட்டவர்கள் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
பெறுமதிமிக்க தொலைதொடர்பு கம்பிகள் கடந்த 2022 ஆண்டு முதல் தொடர்ந்து களவாடி வந்த நால்வரை ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி நிப்புன தெஹிகம மற்றும் உதவி அதிகாரி ஜயசிங்க அவர்களின் பணிபுரையில் மஸ்கெலியா பொலிஸ் அதிகாரி புஸ்ப்பகுமார மற்றும் புலத்சங்கள, சார்ஜன்ட் ரெங்கரன், புவிராஜ், நவுஷாட், பிரேம்குமார் ஆகியோர் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்ட போது செம்பு 7 கிலோ, 500கிரேம்,தொலை தொடர்பு கம்பிகள் 27.கிலோ 500 கிரேப், 5 கிலோ அளுமினியம் கைப்பற்றபட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கருத்து தெரிவிக்கையில் கடந்த இரண்டு வருடங்களாக ஹட்டன் தொலை தொடர்பு நிறுவன அதிகாரி சுதர்மன் மகிந்த ஹேவாகே சுமார் 7 முறைப் பாடுகள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து உள்ளதாகவும் மஸ்கெலியா தொலை தொடர்பு நிலையத்தில் இருந்து நல்லதண்ணி, மறே, மவுசாகல, லக்கம், புரவுன்லோ மற்றும் கஷ்ட்ட பிரதேசங்களுக்கு செல்லும் தொலைதொடர்பு கம்பிகள் வெட்டப்பட்டுள்ளன.
கம்பிகள், செம்பு, அளுமினியம் உட்பட முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது என புஸ்ப்பகுமார தெரிவித்தார்.