ஜெனிவாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் NPP யின் தொழிற்சங்கவாதியான வசந்த சமரசிங்கவை ஜெனிவாவில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இச்சந்திப்பின் போது தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் இருவருக்குமான நீண்ட கால நட்பு குறித்து நினவூட்டப்பட்டதுடன், உலகளவில் தொழிற்சங்கத்தின் நலனில் இருவரும் வலுவாக இணைந்து பணியாற்றியமை நினவூட்டப்பட்டது.
இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் ராஜதுரை உடனிருந்தார்.