புகையிரத சாரதிகளின் பதவி உயர்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்று முதல் ரயில்வே வேலைநிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளது.
புகையிரத சாரதிகளின் பிரச்சினைகளுக்கு ரயில்வே பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதன் காரணமாகவே அதிகாரிகள் இந்த தொழில் நடவடிக்கையில் இறங்க நேரிட்டதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது