வரதன்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் அமைச்சினால் பல்வேறு விழிப்புணர்வு செயல்திட்டங்கள் முன்னெடு க்கப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான சுற்றாடல் தின நிகழ்வு இம்முறை மண் முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாவற்காட்டில் இடம்பெற்றது. மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் கலந்து கொண்டார்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாவற்காடு ராமகிருஷ்ண மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சுற்றாடல் சார் கண்காட்சி என்பனவும் இங்கு இடம் பெற்றது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் டி. தர்ம தாச தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வில். பயனுறுதி மிக்க நில பயன்பாட்டின் ஊடாக நலம் மிகுந்த நாடு எனும் கருப்பொருளுக்கு அமைவாக இடம் பெற்ற கண்காட்சி நிகழ்வை மாவட்ட அரசாங்க அதிபர் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உலக சுற்றாடல் தின பாடல் இடம் பெற்றதுடன் கலை கலாச்சார நிகழ்வுகளும் அதிதிகளில் உரைகளும் இங்கு இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்யானந்தி மற்றும் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.