பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ள மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு-- 2024.06.05


 































FREELANCER

2023 ஆண்டுக்கான க .பொ. த  உயர்தர பரீட்சை   பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இருந்து    உயர்தர பரீட்சைக்கு தோற்றி இருந்த மாணவர்களில்  பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  பாடசாலை அதிபர் கே.பகீரதன் தலைமையில் நடை பெற்றது.
கடந்த வருடம் 93. மாணவர்கள்  பரீட்சைக்கு தொற்றி இருந்தனர் , அவர்களில் 20மாணவர்கள்  பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர் .
பொறியியல் தொழில்நுட்பத்துறைக்கு 12 மாணவர்களும் , விஞ்ஞான தொழில்நுட்பத்துறைக்கு04 மாணவர்களும் ,கலைத்துறைக்கு 02மாணவர்களும், பொருளியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்துறைக்கு தலா  ஒவொருவரும்  தெரிவு செய்யப்பட்டிருந்தனர் .
இரண்டு மாணவர்கள் 3A சித்தி பெற்றுள்ளனர்.

.மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்று பொறியியல் தொழில்நுட்பத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் AHMED SHAKIR MOHAMED SAFWAN  என்ற மாணவனுக்கு மட்டக்களப்பு இலங்கை வங்கியினால் ரூபாய் 100, ௦௦௦ பெறுமதியான காசோலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் .
மேலும் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு தகுதி பெற்ற மாணவன் ஒருவரின் தந்தையால் பாடசாலை அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .