காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பில் விசாரணைகள் முன்னெடுப்பு.

 







காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மண்முனை  வடக்கு மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட 34 காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


இதன்போது கொழும்பிலிருந்து வருகைதந்த காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் மட்டக்களப்பு காணாமலாக் கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய கிளைக்கு நேரில் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

காணாமலாக்கப்பட்ட தனது மகன் உயிரோடு  திரும்பி வருவார் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது எனவும் நோயுற்ள்ள தனக்கு அரசாங்கத்தினால்  நஷ்ட ஈடுகளை தந்து உதவுமாறு தாய் கவலையுடன் அரசாங்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 2003 ஆம் ஆண்டு  கரடியனாரு பகுதியில் தனது மகன் காணாமல் போன தாகவும்  இதுவரை காலமும் தான் தேடித் திரிவதாகவும் இன்று வரை உரிய பதில்  கிடைக்கவில்லை எனவும் இனி அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது எனவும் நோயுற்ள்ள தனக்கு அரசாங்கத்தினால்  நஷ்ட ஈடுகளை தந்து உதவுவதன் மூலம்  வாழ்வாதாரத்தினை கொண்டு நடத்த முடியும் எனவும் தனது மகன் உயிரோடு இருந்ததால் தன்னை நன்றாக பார்த்திருப்பார் என்று காணாமலாக்கப்பட்ட தாய் கவலையுடன் தனது கருத்தை தெரிவித்தார்.

இதன்போது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.