கிராம மட்டங்களில் இருப்பவரை மீட்டெடுப்பதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வதுடன் சுற்றுலாத்துறை கட்டி எழுப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளது இந்த நாட்டையும் இந்த மண்ணையும் கட்டி எழுப்புவதற்கு ஒவ்வொருவருடைய பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்-ராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன்
நாட்டின் உற்பத்திக்கு குறைவாக இருக்கும் ஆசிரியர்களின் சம்பளத்தினால் நாட்டின் பலவீனம் பற்றிய விடயங்களை பேசினாலும் இருந்தாலும் இவ்வாறான பலவீனங்களை தாண்டி உயர்வான ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு நம்பிக்கை இழந்த இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டையும் இந்த மண்ணையும் கட்டி எழுப்புவதற்கு ஒவ்வொருவருடைய பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.
நம்பிக்கையுடன் பயணிப்பதற்கு நாம் பார்க்கின்றோம். இதற்காகத்தான் நாம் கிராம மட்டங்களில் இருப்பவரை மீட்டெடுப்பதற்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதுடன் சுற்றுலாத்துறையில் முயற்சியை ஏற்படுத்துவதுடன் பிராந்தியத்தில் இடம்பெறும் சம்பவங்களுடன் நாம் கவனமாக பயணிப்பதுடன் எமது மாவட்டத்தின் அழகை கட்டி எழுப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளது இவற்றையெல்லாம் முன்னெடுப்பதற்கு உயர்வான எண்ணத்துடன் சிந்தனைகளுடன் நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்ற நேர்மையான செயற்பாட்டுடன் எமது பணிகளை முன்னெடுக்க வேண்டுமென ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.





