கல்வி மற்றும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படுத்திய வள்ளலார் அமரர் கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை (KOV) அவர்களின் வரலாறு.

 


(அமரர் கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை (KOV) யின்
69 வது சிரார்த்த தினத்தை (26.11.2023) குறிக்கும் முகமாக வெளியிடப்படும் கட்டுரை.

கலாநிதி கனகராஜா பிரேமகுமார்
தலைவர்
கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை ஞாபகார்த்த நம்பிக்கை நிதியம்
கல்லடி உப்போடைஇ மட்டக்களப்பு.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில், கிழக்கே இந்துமகா சமுத்திரத்தையும்  மேற்கே மட்டுநகர் வாவியையும் எல்லையாக கொண்டுள்ள எழில் கொஞ்சும் கல்லடி உப்போடை  கிராமத்திலுள்ள வாவிக்கரை இல்லத்தில் கந்தப்பெருமாள் கதிராமத்தம்பி உடையார்-வள்ளியம்மை   தம்பதிகளின் மூத்த புதல்வராக 1881ம் ஆண்டு அவதரித்த வேலுப்பிள்ளைக்கு சகோதரிகளாக தெய்வானைபொன்னம்மா ஆகியோரும் சகோதரராக கனகரெட்ணமும் வாய்த்தனர்.

.இவர்  தனது பாடசாலை கல்வியை  யாழ் இந்துக்கல்லூரியில் பூர்த்தி செய்தார். அமரர் வேலுப்பிள்ளை அவர்கள் 1917 ஆண்டு தனது தந்தையார்  காலமான பிறகு கல்லடி உப்போடை -நொச்சிமுனை சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தாவாக பொறுப்பேற்று    1918–1926 வரையிலான காலப்பகுதியில் இச்சித்திவிநாயகர் ஆலயம் பெருவளர்ச்சி பெற முக்கிய பங்கு  வகித்தார். 

 இன்று நாம் காணும் கோயில் கட்டிடங்கள் இக்கால கட்டத்திலேயே எழுந்தன. பிரதான கோயிலுடன் அர்த்த மண்டபம், ஸ்தம்ப மண்டபம், ராஐகோபுரம், சண்டேசுபரர் ஆலயம், யாகமண்டபம்,   வசந்தமண்டபம், வடபுறத்து மணித்தூண், கொடித்தம்பம் என்பவற்றை தம் சொந்த நிதியில் நிறுவினார்.

மேலும் மகோற்சவத்திற்கு தேவைப்படும் வாகனங்கள் சூர சம்காரத்திற்கான சூரனும் மற்றும் கொடி மேடை   தீபாதிகள் பாத்திரங்கள் என்பனவும் பெறப்பட்டன. அத்துடன் கல்லடி உப்போடை-நொச்சிமுனை நாகதம்பிரான் ஆலயம் அதன் அருகிலுள்ள 'புஸ்பகரணி' எனப்படும் தீர்த்தக்குளம் என்பவற்றை  நிறுவியதோடு ஆலய நிர்வாக முறையிலான பஞ்சாயத்து முறைமையை மாற்றி 1947ல் இப் பகுதி ஐந்து   குறிச்சிகளாகப் பிரிக்கப்பட்டு ஆலயங்களின் பரிபாலனம் அவரால் கல்லடி உப்போடை நொச்சிமுனை   மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அருகிலுள்ள பேச்சியம்மன் ஆலயத்திற்குரிய அம்மன் சிலையை
இந்தியாவிலிருந்து தருவித்து பேச்சியம்மன் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தார். 25 திகதி சித்திரை மாதம்  1928 இல் ஆலய வளாகத்துக்கு சுவாமி விபுலாநந்தரை வரவழைத்து சுவாமி விபுலாநந்தருக்கு சிவாநந்த   வித்தியாலய ஸ்தாபகர் என்ற கௌரவத்தையும் பெற்றுக்கொடுத்து  சிவாநந்த வித்தியாலயம் எனும் இந்து
ஆண்கள் ஆங்கில பாடசாலை கல்லடி உப்போடையில் உருவாக ஆரம்ப கர்த்தாவாக முக்கிய பங்களிப்பை   வழங்கினார். 
தன்னால் தயாரிக்கப்பட்ட 2809 இலக்க நன்கொடை சாசனத்தை இராமகிருஷ;ண மிஷனுக்கு   வழங்குவதற்காக மக்கள் முன்னிலையில் சுவாமி விபுலாநந்தரிடம் கையளித்தார். இச்சாசனத்தின் மூலம் நன்கொடை வழங்குபவர்களாக கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை, திருமதி.சபாபதிப்பிள்ளை
உடையார் சின்னத்தம்பி தங்கம்மா, திருமதி. கதிராமத்தம்பி உடையார் கந்தப்பெருமாள் வள்ளியம்மை,  கதிராமத்தம்பி உடையார் கனகரெத்தினம், நொத்தாரிஸ் கணபதிப்பிள்ளை நல்லதம்பி , நொத்தாரிஸ்    நல்லதம்பி செல்வதுரை ஆகியோரின் கையெழுத்துக்கள் பெறப்பட்டு இராமகிருஷ;ண மிஷன் சார்பில்   நன்கொடை பெறுபவராக சுவாமி விபுலாநந்தரின் கையெழுத்துடன் திரு. கதிராமத்தம்பி உடையார்    வேலுப்பிள்ளைக்குரிய   1 ஏக்கர் 0 ரூட் 19 பேர்ச் (வெம்புக்காடு) நிலமும் அதிலுள்ள வித்தியாலய ஆரம்ப   கட்டிடமும் ((Title Plan NO– 338337), திரு.கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை, நொத்தாரிஸ்
கணபதிப்பிள்ளை நல்லதம்பிக்குரிய 4 ஏக்கர் 1 ரூட் 25 பேர்ச் (வெம்புக்காடு) பிரிபடாத காணியும் ((Title Plan NO – 338332, திரு .கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளைக்குரிய   9 ஏக்கர் 3 ரூட் 18 பேர்ச் (வெம்புக்காடு) காணியும் (Title Plan NO- 377089))  திருமதி. சபாபதிப்பிள்ளை உடையார் சின்னத்தம்பி
தங்கம்மாவுக்குரிய (1/2 பங்கு) கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை, கதிராமத்தம்பி உடையார்,   கனகரெத்தினம், நொத்தாரிஸ் கணபதிப்பிள்ளை நல்லதம்பி, நொத்தாரிஸ்  நல்லதம்பி செல்வதுரை   ஆகியோருக்குரிய   (1/2 பங்கு) மொத்தமாக 0 ஏக்கர் 1 ரூட் 37 பேர்ச் காட்டு வளவு (கோவிலடி வளவு)
காணியும் அதிலுள்ள சைவப்பள்ளிக்கூட கட்டிடங்களும் ( B 113 /175) கதிராமத்தம்பி உடையார் மற்றும்   சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரால் 27.4.1912 அன்று KCVK Udaiyar & Sons  கம்பனி பெயரில்  சைவப்பள்ளிக்கூட நயத்துக்காக வைப்பிலிட்டிருந்த ரூபாய் 5000.00  பணத்தை (உறுதி இல 101),   
1 வது குறிப்பிட்ட வித்தியாலய ஆரம்ப கட்டிடத்துடன் அமைந்த காணியில்; கட்டிடங்கள் அமைக்கவும், (உறுதி   இல 102) இவ்வாதனங்கள் மற்றும் அதிலுள்ள கட்டிடங்கள் யாவற்றுக்கும் ரூபாய் 13,000/=  விலையை    தீர்மானித்து மட்டக்களப்பில் கல்வி அபிவிருத்தி செய்வதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டது. சுவாமி   விபுலாநந்தரும் இச்சாசனத்தை இராமகிருஷ;ண மிஷனிடம் கையளிப்பதற்காக சாசனத்தை இராமகிருஷண  
மிஷன் சார்பில் பெற்றுக்கொண்டார். சாசனத்தின் மூலம் கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளையினால்   அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணிகளில் பின்வரும் கட்டிடங்கள் அமையப்பெற்றன:-

(i) 1 ஏக்கர் 0 ரூட் 19 பேர்ச் ஆரம்ப சிவாநந்த வித்தியாலய கட்டிடத்துடனான காணி-;;   தற்போதைய சிவாநந்தா வித்தியாலய தேசிய பாடசாலையின் சில வகுப்பறை கட்டிடங்கள்
.
(ii) 9 ஏக்கர் 3 ரூட் 18 பேர்ச் காணி-; சித்திரகூட விடுதி (  தற்போது அழிவடைந்து விட்டது)
  கமலாலய விடுதி  (  தற்போது அழிவடைந்து விட்டது)  இரத்தினாலய விடுதி  (சிதைந்த   நிலையிலுள்ள இவ் விடுதி தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது)

 பழைய மற்றும் புதிய  மாணவர் விடுதி கட்டிடங்கள் , விளையாட்டரங்கு ,  சிவாநந்த வித்தியாலய விளையாட்டு
மைதானம் போன்றவை   மைதானம் போன்றவை.

(iii) கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை, நொத்தாரிஸ் நல்லதம்பி ஆகியோருக்குரிய   பிரிபடா காணி 4 ஏக்கர் 1 ரூட் 25 பேர்ச் காணி- சிவபுரி (ஒரு பகுதி தற்போது   வைத்தியசாலையாக உள்ளது) விபுலாநந்த ஞாபகார்த்த மண்டபம், விபுலாநந்தர் சமாதி,   சாரதா பாலர் பாடசாலை   

சாசனத்தின் மூலம் இராமகிருஷ;ண மிஷனுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 0 ஏக்கர் 1 ரூட் 37   பேர்ச் காட்டு வளவிலிருந்த சிறிய ஆரம்ப கட்டிடங்களை கொண்ட சைவப்பள்ளிக்கூடம் தற்போது  மாணவிகள் விடுதி;, மற்றும் புதிய ஒன்றுகூடல் மண்டபத்துடன் அமைந்த பல அடுக்குமாடி   கட்டிடங்களை கொண்ட விவேகானந்தா மகளிர் கல்லூரியாக பாரிய வளர்ச்சி பெற்றுள்ளது.

அமரர் கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை அவர்கள் தனது தந்தையார்; கந்தப்பெருமாள் கதிராமத்தம்பி உடையாரினால்                      மொறக்கொட்டாஞ்சேனையில் ஆரம்பிக்கப்பட்ட இந்து  பாடசாலையையும் சிறப்பாக முகாமைத்துவம் செய்தார்,  இவ்வாறு இப்பகுதியில் கல்வி மற்றம்
ஆன்மிக மறுமலர்ச்சிகளை ஏற்படுத்தி வரும் வேளையில் தனது தந்தையாரால் ஆரம்பிக்கப்பட்ட     KCVK Udaiyar & Sons    கம்பனியின் கொப்பரா வர்த்தகத்தையும் திறம்பட நிர்வகித்து நடத்திவந்தார்.    துரதிஸ்டவசமாக இந்தியாவுக்கு கொப்பரா ஏற்றிச் சென்ற வர்த்தக கப்பல் புயல் காரணமாக   வங்கக் கடலில் தாண்டதால் ஏற்பட்ட நஸ்டம் காரணமாக கொப்பரா வர்த்தகம் KCVK Udaiyar & Sons     கம்பனி நிர்வாகம் போன்றவற்றை கைவிட நேர்ந்தது. வாழ்வில் ஏற்பட்ட இந்த சோகத்தை    கண்டு சலிப்படையாமல் அமரர் வேலுப்பிள்ளை அவர்கள் தகப்பனார் கதிராமத்தம்பி    உடையாரினால் அவருக்கு கையளிக்கப்பட்ட வந்தாறுமுலை ,வாகரை பிரதேசங்களில்   அமைந்துள்ள பாரிய தென்னந்தோப்புகளினூடாக கிடைக்கும் வருமானத்தை கொண்டு தனது  
குடும்பத்தை கவனித்ததோடு தொடர்ந்தும் இப்பிரதேச கல்வி மற்றம் ஆன்மிக முன்னேற்ற பணியில்    முழுமையாக ஈடுபட்டார்,

மண்டூர் கோயிலில் இவருடைய தகப்பனார் கதிராமத்தம்பி உடையாரினால்
அமைக்கப்பட்ட மண்டூர் கோயில் மடத்தில் வருடா வருடம் மண்டூர் திருவிழாவின் போது     அன்னதானத்தை இறக்கும் வரை சிறபப்பாக நடாத்தினார.; இராமகிருஸ்ண மிஸனால்  பரிபாலிக்கப்பட்ட விவேகானந்தா பெண்கள் பாடசாலை மற்றும் சிவாநந்தா வித்தியாலயம் போன்ற   பாடசாலைகள் அரசாங்கத்தினால் கையேற்கப்படும் வரை அவற்றின் முகாமைத்துவ குழுக்களில்  அங்கத்துவராக இருந்து இக் கல்விக்கல்லூரிகளின்; பாரிய வளர்ச்சிக்கு தன்னாலான பணிகளை   செய்தார். 

 அமரர் கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை (KOV) அவர்கள் கல்லடி
உப்போடையிலுள்ள உயர்குடும்பத்தைச் சேர்ந்த செல்லத்தங்கம் என்பவரை திருமணம் முடித்து   நமசிவாயம், பஞ்சாட்சரம், கதிராமத்தம்பி, திருநாவுக்கரசு, சிவலிங்கம், சிவபாதசுந்தரம்   போன்றோரை ஆண் வாரிசுகளாகவும் தெய்வானப்பிள்ளை, சீவரெட்ணம், சொர்ணம்மா, நாகரெட்ணம்   போன்றோரை பெண் வாரிசுகளாகவும் வாய்க்கப் பெற்றார். இவர்களில் நாகரெட்ணம் ,சிவலிங்கம்   என்போர் சிறு வயதிலும் திருநாவுக்கரசு இளவயதிலும் காலமானார்கள் ஏனைய பிள்ளைகள்   யாவருக்கும் சிறப்பான திருமணபந்தங்களை ஏற்படுத்தி இறுதி மூச்சு வரை கல்லடி உப்போடை  
நொச்சிமுனை சித்தி விநாயகர், பேச்சியம்மன், நாகதம்பிரான் ஆலயங்களின் தர்மகர்த்தா   (Manager) பொறுப்பை செவ்வனே ஆற்றி கல்லடிஉப்போடை நொச்சிமுனை மக்களுக்கு சிறந்த   ஆன்மிக சேவையை வழங்கி கல்லடி உப்போடை வாவிக்கரையில் அமைந்துள்ள தனது பாரம்பரிய
இல்லத்திலும் அவரினால் கட்டப்பட்ட ராஜ்மகால்; இல்லத்திலும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து 1954 ம்   ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் திகதி சிவபதம் அடைந்தார் .

எதிர்வரும் ஆண்டுகளில் அமரர் கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை (KOV) அவர்களின்
சிரார்த்த தினத்தை (26.11.2023 'வள்ளலார் தினமாக' ஒவ்வொரு வருடமும் கொண்டாட
கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை ஞாபகார்த்த நம்பிக்கை நிதியம் (Kathiramthamby   Odaiyar Velupillai Memorial Trust Fund- KOVMTF) உறுதி பூண்டுள்ளது. இவ்வூரில் வாழ்ந்து,   இப்பிரதேசத்தின் கல்வி மற்றும் ஆன்மிக ஆரம்ப மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கொடைவள்ளல் அமரர்  கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை (KOV) அவர்களின் முக்கியத்துவத்தையும்  அவரின்  தூரநோக்குச் சிந்தனையையும் இன்றைய இளஞ்சமுதாயம் அறிதலே இதன் நோக்கமாகும்.

இந்நடவடிக்கைகளால் அமரர் KOV போல் பல தூர நோக்கு சிந்தனையாளர்கள் எமது பகுதியில்  உருவாக வேண்டும் ' நமது முன்னோர் பெருந்தகைமை படைத்திருந்தார்கள் ! அவர்  வழிவந்தோமாகிய யாம் அவரிலும் சிறந்து விளங்குவோமாக ! நம்மிலும் பார்க்க நமக்கு  பின்வருகின்ற நமது மக்கள் உயர்வடைவதற்கு வேண்டிய சாதனங்களை சேர்த்து வைப்போமாக.'