நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது.

 


சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை    தோல்வியடைந்தால் எவராலும் இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது. இதுதான் உண்மை என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21)   வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். 
   
 இலங்கைக்கு இரண்டாம் கட்ட நீடிக்கப்பட்ட கடன் தொகையை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன்  எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி  முக்கிய பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ளது. பொருளாதார மீட்சிக்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டம் வெற்றி பெற்றால் தான் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 48 மாதகால கடன் ஒத்துழைப்பை வழங்கும்  அதனை இந்த வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை துரதிஸ்டவசமாக தோல்வியடைந்து, கடன் மறுசீரமைப்பும் தோல்வியடைந்தால் எவராலும் இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது. இதுதான் உண்மையாகும் என்றார்.