எதிர்வரும் 4 அல்லது 5 நாட்களில் கல்விப் பொதுத்தராதர சாதாரண
தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள்களுக்கு பதிலாய் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளது.
ஆகையினால், வெகுவிரைவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.





