மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஸ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலை ஆண்டு விழா-2023.11.25




























(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு கல்லடி   உப்போடை கல்லடி ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 53 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (25) கல்லடி சுவாமி விபுலானந்தர் மணி மண்டபத்தில் இடம்பெற்றது.

பாலர் பாடசாலை அதிபர் திருமதி இந்திராணி புஸ்பராஜா தலைமையில் "செல்லச் சிட்டுக்களின் சிங்காரக் கொண்டாட்டம்" எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு  கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் முகாமையாளர் நிலமாதவானந்தாஜீ மகராஜ் மற்றும் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்சிநந்தாஜீ மகராஜூம், பிரதம அதிதியாக மட்டக்களப்பு முன்பிள்ளைப் பருவப் பணிப்பாளர் வி.சந்திரமோகனும், விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.ஹரிகரராஜ் மற்றும் பிரதேச செயலக உதவி முன்பிள்ளைப் பருவ உத்தியோகத்தர் ரி.மேகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறார்களின் ஆடல், பாடல் மற்றும் அபிநயங்கள் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.பிரதேச வாழ் பொது மக்களும் , சிறார்களின் பெற்றோர்களும் நிழல்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்