(கல்லடி செய்தியாளர்)
விம்பம்- லண்டன் நடத்தும் மலையகம் "200" மலையக மக்களின் "வலியும் வாழ்வும்" எனும் கருப்பொருளை உள்ளடக்கிய சிறுகதை, ஓவியம் மற்றும் கட்டுரைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு, ஓவியக் கண்காட்சி இன்று சனிக்கிழமை (18) மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய இரு தினங்களும் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.





















































