யானை தாக்குதலுக்குள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 


மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் வியாழக்கிழமை யானை தாக்குதலுக்குள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தோப்பூர் - பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த முருகன் இராசசிங்கம் (வயது 69) என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் சேனைக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யானையானது பாதுகாப்பு வேலியையும் சேதப்படுத்தியுள்ளது. 

குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மூதூர் பொலிஸார் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.