அடுத்த வருடம் அரிசியை இறக்குமதி செய்ய அவசியமில்லை

 


அடுத்த வருடம் அரிசியை இறக்குமதி செய்ய அவசியமில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

நாடுமுழுவதிலும் உள்ள வயல்களில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட அரிசி தேவைக்கு இது போதுமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, நாடுமுழுவதிலும் உள்ள உர களஞ்சியசாலைகள் நிரம்பியுள்ளது. நாட்டுக்கு அதிளவான உர கப்பல்களே வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.