முடங்கிப்போயிருக்கும் தேசத்தை முற்றிலும் தூள்தூளாக்கும்- ஓமல்பே சோபித தேரர்

 


கஞ்சா (கஞ்சா) சாகுபடியை "திரிலோக பத்ரா"Triloka Patra" என்று பெயரிட்டு சட்டபூர்வமாக்கும் எந்தவொரு முயற்சியும் இலங்கையின் வீழ்ச்சியின் தொடக்கமாகும் என்பதுடன், இது ஏற்கனவே முடங்கிப்போயிருக்கும் தேசத்தை முற்றிலும் தூள்தூளாக்கும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், கஞ்சா பயிரிடுவதன் மூலம் பொருளாதாரப் பலன்கள் கிடைக்கும் அதே வேளையில், மக்களின் மனதைத் திசைதிருப்பும் வகையில் திட்டமிடப்பட்ட திட்டம் இது எனவும் அவர் தெரிவித்தார். 

 கஞ்சா பயிரிடுவதை சட்டபூர்வமாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவது ஒட்டுமொத்த தேசத்துக்கும் துரோகம் செய்யும் பாவமாக கருதலாம். "நாங்கள் பிரச்சினையை விவாதிக்க கலந்துரையாடல்களை நடத்தலாம். கஞ்சா ஒரு மருந்து என்று அறியப்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் அது சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது, இது ஆபத்தான போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.