முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில்
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு யானைகளில்
ஒன்றான ‘முத்துராஜா’ சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு அனுப்பப்படவுள்ளது.
இந்த யானை கடந்த 25 வருடங்களாக அளுத்கம கந்தே விகாரையின் பாதுகாப்பில் இருந்தது.
தாய்லாந்து
அரசாங்கம் இந்த யானையை சிகிச்சைக்காக அழைத்து செல்ல நடவடிக்கை
எடுத்துள்ளதாக விகாரையின் பொறுப்பதிகாரி கொகவிட்ட விபுலசார தேரர்
தெரிவித்தார்.
வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர் யானை விகாரையை விட்டு
வெளியேறும் முன் ஆலய வளாகத்தில் யானைக்கு ஆசிர்வாதம் செய்தனர். சில நாட்கள்
தெஹிவளை விலங்கியல் பூங்காவில் வைக்கப்பட்ட பின்னர் தாய்லாந்துக்கு கொண்டு
செல்லப்படுவதாக தாய்லாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யானைக்கு 30 வயது ஆகின்றது. கடைசி நாளான நேற்றுமுன்தினம் யானையை காண ஏராளமானோர் விகாரை வளாகத்தில் குவிந்தனர்.