செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நானோ தொழில்நுட்பத்தின் (Nanotechnology) துணையுடன், ஒரே ஒரு சொட்டு இரத்தத்தைக் கொண்டு புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே மிகத் துல்லியமாகக் கண்டறியும் புதிய மருத்துவக் கருவியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
சீனாவின் ஹாங்சோ நகரில் அமைந்துள்ள வெஸ்ட்லேக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த அதிநவீன முறையைக் கண்டறிந்துள்ளனர். காய்ந்த ஒரு சொட்டு இரத்த மாதிரியைக் கொண்டே குடல், வயிறு மற்றும் கணையப் புற்றுநோய்களை (Colorectal, Stomach, and Pancreatic Cancers) இதனால் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
குறிப்பாக, ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதில், தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை விட இப்புதிய முறை 10,000 மடங்கு அதிக துல்லியம் வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மருத்துவ உலகில் மிகப்பெரிய புரட்சியாகக் கருதப்படும் இக்கண்டுபிடிப்பு, உலகளாவிய மருத்துவ நிபுணர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அதிநவீனக் கருவியை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர சீனா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.





