கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா பொலிசாரினால் அதிரடியாக கைப்பற்றபட்டுள்ளது

 

 







 களப்பு பகுதியில்  சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா  பொலிசாரினால் கைப்பற்றல்!

 
களப்பு கண்னா காடு பகுதியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா சட்டவிரோத கசிப்பு உற்பத்தி பொருளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளதாக  கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபெரத்ன  தெரிவித்தார்.

 கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா களப்பு பகுதியில்  சூட்சமமான முறையில் வடி சாராயம் வடித்து கொண்டு இருந்த வரல்கள் 04  மறைத்து வைக்கப்பட்டிருந்த வரள்கள் என்பவற்றை  கொக்கட்டிச்சோலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று 26.05.15 வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை பொலிசார் நடாத்திய திடீர்  சுற்றி வளைப்புகளின் போதே 

சுத்து பைப் 04 
ஊறல் வரல் 08 
தோணி 02 

கொக்கட்டிச்சோலை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு  அமைவாக கொக்கட்டிச்சோலை  நிலைய பொறுப்பதிகாரி பி.பொ.ப அபெரத்ன அவர்களின் தலைமையின் கீழ் 
இப் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மற்றும் ஒரு சம்பவம்  தெரிய வருகையில்

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக கொக்கட்டிசோலை முதலையிக்குடா அரியங்குடா களப்பு பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இனைந்து  மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்ட விரோத மதுபானம் கசிப்பு 75000 மில்லி லீற்றருடன் மாவிலங்கத்துறை தாழங்குடா பகுதியை சேர்ந்த 60 வயது நபரை கொக்கட்டிச்சோலை பொலிசார் கைது செய்துள்ளனர்

இது தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்