வரதன்
ஜனாதிபதியின் வெற்றிக்காக அவருடன் ஒப்பந்தம் 34அரசியல் கட்சிகளில் கிழக்கு மாகாணத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துறை சந்திரகாந்தனின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாவட்டத்தில் பல்வேறு சமூக நிகழ்வுகள் இடம் பெற்றன
கட்சியின் கலை கலாச்சார பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் எனும் இரத்ததான நிகழ்வு கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பு. பிரசாந்தன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று இடம் பெற்றது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக இந்த இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது
இதேவேளை மட்டக்களப்பு வாவி கரையை அண்டிய பிரதேசங்களில் பயன்தரும் மரக்கன்றுகளும் என்று நாட்டி வைக்கப்பட்டது
இன்றைய இந்த நிகழ்வுக்கு மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் ரத்த வங்கியின் வைத்திய அதிகாரிகள் ஊழியர்கள் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.